Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இந்தியா-ஜிம்பாப்வே நாளை முதல் டி.20 போட்டியில் மோதல்

ஹராரே: சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டி.20 தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டி.20 போட்டி நாளை நடக்கிறது. ஹராரேவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் ஆடும் லெவனில் அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ்கான் அல்லது ஹர்ஷித் ராணா, கலீல் அகமது, முகேஷ்குமார் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கலாம். முதல் 2 போட்டியில் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், சிவம்துபே, ரிங்குசிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடைசி 3 போட்டிகளில் இவர்கள் ஆட உள்ளனர். ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, ஜடேஜா ஆகியோர் டி.20 போட்டியில் ஓய்வு அறிவித்துவிட்ட நிலையில் அவர்களின் இடத்தை நிரப்ப போகும் வீரர்கள் யார் என்பதை தேர்வு செய்யும் தொடராக இது அமையும். மறுபுறம் சிக்கந்தர் ரசா தலைமையிலான அணியில் புதுமுக வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளனர். சொந்த மண்ணில் களம் இறங்கும் ஜிம்பாப்வே பலம் வாய்ந்த இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்க போராடும். இந்த போட்டியை சோனி டென் டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 8 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 6ல் இந்தியா, 2ல் ஜிம்பாப்வே வென்றுள்ளன. கடைசியாக மோதிய 3 போட்டியிலும் இந்தியா தான் வென்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக 2022 உலக கோப்பையில் மெல்போர்ன் இந்தியா 186/5 ரன் எடுத்தது தான் அதிகபட்சம். ஜிம்பாப்வே ஹராரேவில் 2016ல் 170/6 எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர். ஹராரே ஸ்டேடியத்தில்...

* ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் இந்தியா இதுவரை 7 போட்டிகளில் ஆடி 5ல் வென்றுள்ளது. 2ல் தோல்வி அடைந்துள்ளது.

* ஜிம்பாப்வே இங்கு 38 போட்டியில் 9 வெற்றி, 29ல் தோல்வி அடைந்துள்ளது.

* ஒட்டுமொத்தமாக இங்கு இதுவரை நடந்துள்ள 41 டி.20 போட்டியில் முதலில் பேட் செய்த அணி 23, சேசிங் அணி 18 போட்டியில் வென்றுள்ளன.

* ஆஸ்திரேலியா இங்கு ஜிம்பாப்வேக்கு எதிராக 2018ல் 229/2 எடுத்ததுதான் ஒரு அணியின் அதிக பட்ச ரன். இந்தியாவின் அதிகபட்சம் 178/5 , ஜிம்பாப்வே 205/3.