Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவை முதன்மையான சந்தையாக மாற்றும் மேகி: ஒரே ஆண்டில் 600 கோடி மேகி பாக்கெட்கள் விற்பனை

சுவிஸ்: வரும் நிதியாண்டில் இந்தியா தங்களது முதன்மையான சந்தையாக திகழும் என மேகி நூடுல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 600 கோடி மேகி பாக்கெட்கள் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈயம் கலந்ததாக சர்ச்சை, தடைவிதிப்பு, தடை நீக்கம் என 9 ஆண்டுகளில் விட்ட மார்க்கெட்டை மேகி நூடுல்ஸ் மீண்டும் தன்வசம் படுத்தியது. சுவிஸ் நநாட்டை தலைமையிடமாக கொண்ட நெஸ்லே பல்வேறு பொருட்களை தயாரித்தாலும் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் அடையாளம் மேகி நூடுல்ஸ்தான்.

2 நிமிடங்களில் செய்துவிடலாம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் 80களின் தொடக்கத்தில் இந்திய இல்லங்களில் நுழைந்த மேகி அதன் பிறகு தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது. நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை மேகி நூடுல்ஸ் தனது சந்தையை விரிவுபடுத்தினாலும் மற்றொரு பக்கம் ஆரோக்கியமானதா என்ற விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் உச்சமாக மேகி நூடுல்ஸ்யில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி ஈயம் இருப்பதாக இந்தியா உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதற்கு தடை விதித்தது.

இந்த ஏலத்தின் மூலம் மனிதர்களுக்கும், அதனை உட்கொள்ளும் விலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தடை காரணமாக இந்தியாவில் தனது சந்தையை முழுமையாக இழந்தது மேகி. ஒரே மாதத்திற்குள் அதன் விற்பனையும் பூஜ்யமானது. இதனை பயன்படுத்தி மேகியின் போட்டியாளர்களான யிப்பி, டாப் ராமென் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சந்தையை விரிவுபடுத்தின. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவால் தங்கள் மீதான தடை 5 மாதங்களுக்கு பிறகு நீங்கிய நிலையில் மீண்டும் களமிறங்கியது மேகி. இதன் பிறகு கவர்ச்சிகரமான விளம்பரங்கள், புதிய பொருட்களை அறிமுகப்படுத்தியது.

அளவை அதிகரித்தது போன்றவை மேகிக்கு கைகொடுக்க தொடங்கியது. 9 ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவின் நூடுல்ஸ் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ளது. 2023-2024ம் நிதியாண்டில் 600 கோடி மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நெஸ்லே நிறுவனம் தெரிவித்துள்ளது. மேகி மட்டுமின்றி நெஸ்லே நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான கிட் கேட் சாக்லேட் கடந்த நிதியாண்டில் 420 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 140க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய நெஸ்லே நிறுவனம். 2020-2025 இடைப்பட்ட காலத்தில் ரூ.7,500 கோடி அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.