Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இணைய வரலாற்றில் முதல்முறையாக 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருட்டு: தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

நியூயார்க்: உலகளவில் இணையம் பயன்படுத்துவோரின் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள்(கடவுச்சொல்) திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கூகுள், பேஸ்புக், எக்ஸ்(ட்விட்டர்), இன்ஸ்டாகிராம், இமெயில் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக கணக்குகளை வைத்துள்ளனர். மேலும் அரசு, தனியார் அலுவலகங்கள் உள்பட பல தரப்பிலும் சமூக ஊடக கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட்கள் மிகவும் முக்கியமானவை.

இந்நிலையில் உலகளவில் 1,600 கோடி பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது. முதன்முறையாக அதிக எண்ணிக்கையில் கடவுச்சொற்கள் திருடப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இவ்வாறு திருடப்பட்ட கடவுச்சொற்கள் டார்க் வெப் தளத்தில் விற்கப்பட்டு ஹேக்கர்களுக்கு செல்கிறது. அதை பயன்படுத்தி தனி நபர் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு சமூக விரோத செயல்களை செய்யப்படுகின்றன. மேலும் இது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. மிகப்பெரும் இந்த திருட்டிலிருந்து தப்பிக்க உடனடியாக அனைத்து சமூக ஊடக பயனாளர்களும் தங்கள் பாஸ்வேர்ட்களை உடனே மாற்றுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.