ஏழுவயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வீட்டு உரிமையாளருக்கு 20ஆண்டுகள் சிறை: செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டபகுதியில் தனது தாயுடன் வசித்து வருபவர் 7 வயது சிறுமி. இந்த சிறுமியின் தந்தை சிறுமியின் தாயை விட்டு பிரிந்த நிலையில் சிறுமியின் தாயும் மட்டும் பாலாஜி என்பவரது வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். சிறுமியின தாய் வீட்டு வேலை செய்து சிறுமியை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தாய் வேலைக்கு செல்லும் நேரங்களில் சிறுமியை பாலாஜியின் வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒருநாள் சிறுமி மட்டும் தனியாக வீட்டிலிருந்த போது பாலாஜி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் சிறுமியை அவரது வீட்டிற்கு கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அப்படி சொனனால் உன்னையும் உன் அம்மாவையும் வீட்டை விட்டு காலி செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அதனால் சிறுமி பயந்து கொண்டு யாரிடமும் சொல்லாமல் தனக்கு நடந்த விஷயத்தை மறைத்துவிட்டார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாலாஜி சிறுமியை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் ஒருநாள் பாலாஜியின் செயலால் சிறுமிக்கு கடுமையானவயிறு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் வேறு வழியில்லாமல் தனக்கு நடந்த கொடுமையை சிறுமி அவரது தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அரசு தரப்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் லட்சமி ஆஜராகி இருதரப்பு வாதங்களை கேட்டு வாதாடினார். இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை இறுதிகட்ட விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பாலாஜி குற்றவாளி என நிரூபனமானதால் பாலாஜிக்கு 20ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீநிமன்ற நீநிபதி நசீமாபானு தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.4 லட்சம் வழங்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.