பீகாரில் ஊர்க்காவல் படைத் தேர்வின் போது, மயங்கி விழுந்த இளம்பெண்: ஆம்புலன்ஸில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்
பாட்னா : பீகாரில் ஊர்க்காவல் படைத் உடல் தேர்வுக்கு வந்த 26 வயது பெண்ணை ஆம்புலன்ஸில் வைத்து நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள ராணுவ மைதானத்தில் ஜூலை 24ம் தேதி ஊர்க்காவல் படைக்கு ஆட்தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வுக்கு வந்த 26 வயது பெண் ஒருவர் உடல் தேர்வின் போது மயங்கி விழுந்துள்ளார்.
அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில் நினைவு இழந்து இருந்த போது பல்வேறு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.இந்த புகாரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மட்டும் தொழில்நுட்ப நிபுணர் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சட்ட ஒழுங்கு கெட்டு சீரழிந்து விட்டதாக லோக் ஜனசக்தி கட்சி எம்.பி. சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கடும் கன்னடம் தெரிவித்துள்ளனர்.