Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள் 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள்: விவசாயிகளுக்கு நீலகிரி வனத்துறை அழைப்பு

ஊட்டி: இலவசமாக விநியோகம் செய்ய 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுக்கள், 5 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறை, நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி வடக்கு வனசரகம் சார்பில் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் தரும் மரக்கன்றுகளை வனத்துறை மூலம் இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதன்படி 20 ஆயிரம் சில்வர் ஓக் நாற்றுகள், 5 ஆயிரம் சோலை மர நாற்றுகள் (நாவல், விக்கி, கோலி, கிலிஞ்சி, செண்பகம், மேப்பியா) ஆகியவை தயாராக உள்ளது. இவற்றை பெற ஆதார் அட்டை, பட்டா, சிட்டா ஆகியவற்றின் நகல்களுடன் அணுகலாம். நாற்றுகள் தேவைப்படுவோர் வனவர் யோகேஸ்வரன் என்பவரை 6380783251 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நாற்றங்கால் ஊட்டி வடக்கு வனசரக வளாகம், வி.சி.காலனி, பிங்கர்போஸ்ட் என்ற முகவரியில் அமைந்துள்ளது.