சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 1,332 களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள்: அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
சென்னை: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் ‘நம் மண், மொழி, மானம் காத்திட’ ”ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதி பாக நிலை முகவர்கள், பாக சமூக வலைதள முகவர்கள் மற்றும் இளைஞர் அணி அமைப்பாளர்கள் பயிற்சி கூட்டம் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று நடந்தது.
பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, 1,332 களப்பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி, பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டியும், தேர்தல் நேரங்களில் பாசிச சக்திகள் எப்படியெல்லாம் செயல்படும் என்பதை யெல்லாம் எடுத்து கூறி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் உணவு பரிமாறினார். வழக்கறிஞர் அணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ பேசினார்.
சென்னை மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயகம் கவி, அ.வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல் மற்றும் டான் பாஸ்கோ பள்ளி ரெக்டார், ஜோசப் லியோ தொகுதி பார்வையாளர்கள் இரா. விடுதலை, என்.கிருஷ்ணமூர்த்தி கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐசிஎப் வ.முரளிதரன், கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் எ.நாகராஜன், திரு.வி.க.நகர் வடக்கு பகுதி செயலாளர் செ.தமிழ்வேந்தன், திருவிக நகர் தெற்கு பகுதி செயலாளர் எம்.சாமிகண்ணு, மண்டலக்குழு தலைவர்கள் பி.கே.மூர்த்தி, சரிதா மகேஷ் குமார் மற்றும் இரா.நரேந்திரன், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், கே.எஸ்.எம்.நாதன், பரிதி இளம்சுருதி, மாவட்ட நிர்வாகிகள் ஜி.எம்.தேவன், புனிதவதி எத்திராசன், பகுதி செயலாளர்கள் கூ.பி.ஜெயின், வே.வாசு, ராஜகோபால், நாகராஜ், சொ.வேலு, வி.சுதாகர், எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.மணி, டி.வி.செம்மொழி, பி.ஜே.துளசிங்கம், சாவித்திரி வீரராகவன், வி.ரமேஷ் (எ) நீலகண்டன், ஏ.பி.பூர்ணிமா, அ.நிர்மலாதேவி, எம்.இப்ராஹிம் கனி, ஆர்.கலைச்செல்வி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் வானவில் விஜய், க.வினோத், மோகன், ஜி.தாமோதரன், எம்.பிரோஸ்கான், விஜயகுமார், இரா.வீரமணி, மா.அசோக்குமார், கு.கிருஷ்ணமூர்த்தி, கா.ராஜா முகம்மது, ஜி.பி.பிரதீப்குமார், எல்.சம்பத்குமார், எம்.விநாயகம், து.ஆயிரம், சுதாதீனதயாளன், ராஜேஸ்வரி ஸ்ரீதர், டாக்டர் ஜி.சாந்தகுமாரி, ஜி.வி.நாகவள்ளி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், முன்னோடிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.