Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள்: ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி!

சென்னை: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இதையடுத்து இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை கூறியதாவது: சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர், என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.