Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இயக்குநர் வேலு பிரபாகரன் (68) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்..!!

சென்னை: இயக்குநர் வேலு பிரபாகரன் (68) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். 1989 ஆம் ஆண்டு திகில் படமான நாளைய மனிதன் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு வேலு பிரபாகரன் ஓர் ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஆர். கே. செல்வமணியின் தயாரிப்பில் அசுரன் மற்றும் ராஜாளி ஆகிய இரண்டு அதிரடி படங்களை இயக்கினார். பின்னர் அதிரடி படங்களில் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் புரட்சியாளராக நடித்தார்.

கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களை வேலு பிரபாகரன் இயக்கி உள்ளார். 1980ல் இவர்கள் வித்தியாசமானவர்கள் என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் அறிமுகமானார். இயக்குநர் வேலு பிரபாகரன் தனது திரைவாழ்வில் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டார். வேலு பிரபாகரன் 60 வயதில் தனது படத்தில் நடித்த ஷெர்லி தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்தார். இது திரைத்துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். இவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக‌ வைக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.