Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு

திருவள்ளூர்: ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாடு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது.

சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் வந்து பெரியபாளையத்தில் தங்கி காலையில் ஆடு, கோழி ஆகியவற்றை அம்மனுக்கு பலி கொடுத்து பொங்கல் படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆடி வெள்ளியை முன்னிட்டு பெரியபாளையம் பவானி அம்மன் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.

அம்மன் சன்னதியில் பக்தர்கள் வடை பொங்கலிட்டும், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும், தீச்சட்டி ஏந்தியும், அம்மனுக்கு கூழ் வார்த்தும், கரகம் ஏந்தி வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி செல்கின்றனர். ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.