Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

73 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவான மிக நீண்ட கோடை காலம்.. டெல்லியில் வெப்ப வாதத்தால் ஒரே வாரத்தில் 192 பேர் பலி

டெல்லி : டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் ஜூன் 11 முதல் ஜூன் 19ம் தேதி வரை வெப்ப அலையின் தாக்கத்தால் 192 இறப்புகள் பதிவாகி உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் வெப்ப வாதத்தால் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் சுழன்று விழுந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வட இந்தியாவில் தீவிர வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட பலநகரங்களில் 44 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு கடும் வெப்ப அலை வீசி வருகிறது.

கோடை காலத்தில் நாடு முழுவதும் 40த்திற்கும் மேற்பட்டோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே டெல்லியில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை முன்னுரிமை அடிப்படையில், அனுமதிக்குமாறு மருத்துவமனைகளை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையின்றி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் போதுமான அளவில் தண்ணீர் அருந்துமாறும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே தலைநகர் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களை சேர்ந்த மக்கள் கடத்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான நீண்ட கோடை காலத்தை அனுபவித்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நீண்ட கோடை காலத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.