6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: ஆலந்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு
சென்னை: 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஆலந்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரங்கிமலை பகுதியில் நேற்றைய தினம் சதிஷ் என்பவர் தனது 6 வயது மகளை கொலை செய்துவிட்டு அதன் பின்னர் அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகாயமடைந்த சதிஷ் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருப்பதால் இவர் மீது பரங்கிமலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சதிஷ் சிகிச்சை பெற்றுவரக்கூடிய நிலையில் சம்பவ இடத்திற்கு ஆலந்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதி தீபிகா வருகை தந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் அவரை 2 நாட்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறும் அதன் பின்னர் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டுக்கு மாற்றுமாறும் நீதிபதி உத்தரவிட்டதின் பேரில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.