Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் ரயில் விபத்து; ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்!

டெல்லி: கடலூர் ரயில் விபத்து எதிரொலியாக அனைத்து ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார். ரயில்வே கேட்களில் 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்தார். அதில்,

*கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

*10,000 வாகனங்களுக்கு மேல் கடந்து செல்லும் ரயில்வே கேட்களை இண்டர் லாக்கிங் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும்.

*இண்டர் லாக்கிங்கிற்கு மாற்றப்படாத பகுதிகளில், ரயில்வே கேட்களை தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

*இண்டர் லாக்கிங் இல்லாத பகுதிகளில் ரயில் வருவதை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும்.

*பொதுமக்களே மூடி, திறக்கும் ரயில்வே கேட்களை கண்டறிந்து கணக்கெடுக்க வேண்டும்.

*இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை கண்காணிக்கவும்.

*ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை| பலகைகள் இருப்பதை உறுதி செய்க

* லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்கவும்

* ரயில்வே கேட்களில் பொதுமக்கள் அழுத்தத்தால் மோதல் ஏற்படும் இடங்களுக்கு ரயில்வே போலீசார் வழங்க வேண்டும்.