திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் அருகே உள்ள மலையன்கீழ் பகுதியை சேர்ந்தவர் கே.வி.தாமஸ் (62). மலையன்கீழ் பகுதி சிபிஎம் செயலாளரான இவர், கோதமங்கலம் நகராட்சி 8வது வார்டு கவுன்சிலராக உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக கவுன்சிலராக இருக்கும் இவர், நகரசபை சுகாதார நிலைக்குழு தலைவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் கே.வி.தாமஸ் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக கோதமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கே.வி.தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தாமசை கட்சியிலிருந்து நீக்கி உள்ளதாக சிபிஎம் அறிவித்துள்ளது.