Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடக்க கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தஞ்சை: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (டிட்டோ ஜாக்) 13 அம்ச கோரிக்கைகளில் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகையை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தஞ்சை அருகே மணக்கரம்பை ஊராட்சியில் ரூ.13.97லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை இன்று காலை திறந்து வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் உத்தரவின்படி மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடைகள், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகையை மேற்கொண்டு வருகிறோம். முதன்மை செயலாளரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதிசாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய கல்வி உரிமை சட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.