கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சியை அடுத்த மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட போது அப்பகுதியில் தாராபுரம் பகுதியை சேர்ந்த இமாம் அலி பொள்ளாச்சி கோட்ரோடு பகுதியை சேர்ந்த ஷேக், மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்த சலீம், ரயில்வே ஸ்டேஷன் பகுதியை நந்தகுமார், குமரன் நகரை சேர்ந்த பாபா இப்ராகிம், முஸ்தப்பா,
முகமது அலி, ரத்தினகுமார் ஆகிய 8 பேர் போதை ஊசிகளை பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் இருந்து இவர்கள் போதை மறுத்து செலுத்தப்பட்ட புட்டிகளை வாங்கி ஊசிகள் மூலமாக உடலுக்குள் செலுத்தி உபயோக படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்து போதை ஊசிகளை பயன்படுத்திய 8 பேரையும் பொள்ளாச்சி மேற்கு காவல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


