Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மாவட்டத்தில் வீட்டில் நூலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாவட்டத்தில் வீடுகளில் நூலகம் வைத்திருப்போருக்கு விருது பெற விண்ணப்பிக்கலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு, வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மாவட்டம்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகள்தோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வீடுகள்தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாக பயன்படுத்தி வரும் தனிநபருக்கு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியில் சொந்த நூலகங்களுக்கு விருது, ரூ.3,000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தலைவரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது வீட்டில் உள்ள நூலகத்தில் எத்தனை நூல்கள் உள்ளன, எந்த வகையான நூல்கள் மற்றும் அரிய நூல்கள் விவரம் என்பன உள்ளிட்ட விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு dlochennai1@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகம், 735, அண்ணாசாலை, சென்னை- 600 002 என்ற முகவரியில் விண்ணப்பக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.