சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இலங்கை தொழிலதிபர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு நாட்டினை சேர்ந்தவர்கள் அடைக்கலம் தேடி வருகின்றனர். அந்தவகையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் சட்டவிரோதமாக குடிபெயர்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சென்னையில் சட்டவிரோதமாக 6 ஆண்டுகள் குடும்பத்துடன் தங்கி இருந்த முகமது அர்ஷத்(46) பிடிபட்டார்.
போலி ஆவணம் மூலம் முகமது அர்ஷத் ஆதார் கார்டு பெற்று இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இலங்கையில் உயிருக்கு பயந்து தமிழ்நாட்டில் தங்கி இருந்ததாக முகமது அர்ஷத் வாக்குமூலம் அளித்தார். புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரியில் முகமது அர்ஷத் லாஜிஸ்டிக் நிறுவனங்களை நடத்தி வந்ததும் தெரியவந்தது. சென்னை ஓட்டேரியில் தங்கி இருந்த அவரை உளவுத்துறை போலீசார் இலங்கைக்கு திருப்பி அனுப்பினர்.