Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை - அவசரத் தேவை உள்ளவர்கள் கவனத்திற்கு!

சென்னை: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்புப் பணி காரணமாக சென்னையில் இன்று காலை 8 மணி முதல் ஆக.1 இரவு 10 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது.

பாடி முகப்பேர், கொரட்டூர், புழல், சூரப்பட்டு, திருமங்கலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஷெனாய் நகர், சாந்தி காலனி, வள்ளுவர் கோட்டம், எம்எம்டிஏ காலனி, சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, கோபாலபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, மயிலாப்பூர், தியாகராயநகர், சேப்பாக்கம், விருகம்பாக்கம், நந்தனம், ஆர்.ஏ.புரம், ஆழ்வாட்பேட்டை, ஐஸ்ஹவுஸ், மேற்கு மாம்பலம், சாலிகிராமம், வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், நெளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், காரம்பாக்கம், போரூர்,

வளசரவாக்கம், நெசப்பாக்கம், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், ராமாபுரம், முகலிவாக்கம், மணப்பாக்கம், ஆலந்தூர், தில்லை நகர், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், கோட்டூர்புரம், மந்தவெளி, வேளச்சேரி, அடையாறு, தரமணி, திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் முதல் புறவழிச்சாலை வரை குழாய் பதிப்பு பணிகள் நடப்பதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. புதிதாக அமைத்த 2-வது வரிசை குடிநீர் குழாயை பயன்பாட்டில் உள்ள குழாயுடன் இணைக்கும் பணிகள் நடைபெறுகிறது.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.