காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பலன் இல்லாததால் அதிரடி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒரு பரிகார தலமாக விளங்குகிறது. இங்குள்ள மகதீஸ்வரர் ஆலயம் மற்றும் அதற்கு எதிரே உள்ள படித்துறையில் ஏராளமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் பரிகாரம் செய்வதும், கோவிலுக்கு வந்து செல்வதும் வழக்கம். இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இது மட்டும் அல்லாமல் இழுப்பு தோப்பு என்ற இடத்திலும் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இதன் காரணமாக காவிரியில் அதிகளவு வெள்ளம் வரும்போதெல்லாம் இந்த பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்ப்படும். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு இருந்த குடியிருப்பு வாசிகளுக்கும் மாற்று இடம் என்பது வழங்கப்பட்டிருந்தது.
ஆனாலும் ஒரு சிலர் இன்னும் அந்த வீடுகளை பயன்படுத்தி வந்தார்கள். மகுடேஸ்வரன் கோயிலுக்கு அருகில் உள்ள மற்றும் சில வணிக நிறுவனங்களுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணி இன்று நடைபெற்றது. நீர்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொக்லைன் வாகனங்கள் மூலமாக இழுப்பு தோப்பு பகுதியில் ஒரு 40க்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் மகுடேஸ்வரன் கோவில்அருகில் உள்ள ஆக்கிரமித்திருந்த வணிக நிறுவனங்கள் அதே போல் தனியாருக்கு சொந்தமாக வழிகாட்டு மண்டபம் ஆகியவை தற்போது இடித்து காற்றும் பணி என்பது நடைபெற்று வருகிறது இதன் காரணமாக பரிகார ஸ்தலமான கொடுமுடியில் பரபரப்பு நிலவி வருகிறது.