Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்போடியாவில் சைபர் மோசடி சோதனைகளில் 105 இந்தியர்கள் கைது

கம்போடியா: கம்போடியாவில் சைபர் மோசடி சோதனைகளில் 105 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல கேஜெட்டுகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்டுள்ளது. சைபர் குற்றவாளிகள் அல்லது ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையில், 15 நாட்களில் 138 இடங்களில் சோதனைகளைத் தொடர்ந்து கம்போடியாவில் 3,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 105 இந்தியர்கள் மற்றும் 606 பெண்கள் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட இந்தியர்களை நபர்களை மீண்டும் அழைத்து வர இந்திய அரசு கம்போடிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் இந்தியாவிற்கும் கம்போடியாவிற்கும் இடையே நடந்த உயர்மட்டக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்கள் கம்போடியாவில் தங்கி சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள். இதனால் கம்போடியா ஒரு சைபர் மோசடி மையமாக உலக நாடுகளால் கருதபடுகிறது. இந்தியர்களைத் தவிர, சீனர்கள், வியட்நாமியர்கள் மற்றும் இந்தோனேசிய குடிமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3,075 பேரின் நாடுகள் விவரம்:

* 1,028 சீன குடிமக்கள்

* 693 வியட்நாமியர்கள்

* 366 இந்தோனேசியர்கள்

* 105 இந்தியர்கள்

* 101 வங்கதேசிகள்

* 82 தாய்லாந்து நாட்டவர்கள்

* 57 கொரியர்கள்

* 81 பாகிஸ்தானியர்கள்

* 13 நேபாள நாட்டவர்கள்

* 4 மலேசியர்கள்

மேலும் பிலிப்பைன்ஸ், லாவோஸ், கேமரூன், நைஜீரியா, உகாண்டா, சியரா லியோன், மங்கோலியா, ரஷ்யா மற்றும் மியான்மர் குடிமக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைகளின் போது கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள், போதைப்பொருள், இந்திய மற்றும் சீன காவல்துறையினரின் போலி சீருடைகள், போதைப்பொருள் பதப்படுத்தும் உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், எக்ஸ்டசி பவுடர் மற்றும் பிற போதைப்பொருட்கள் உள்ளிட்ட கேஜெட்டுகள் மீட்கப்பட்டன.

இந்திய அரசாங்கம் தனது குடிமக்களை மீண்டும் அழைத்து வருவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்படி, சைபர் மோசடியில் ஈடுபட்டு கம்போடியா போன்ற நாடுகளுக்குத் திரும்பும் எந்தவொரு இந்தியருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.