Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் மூடப்படுகிறதா?: ஒன்றிய அரசு விளக்கம்

டெல்லி: BSNL நிறுவனம் குறைந்த வருமானத்தை ஈட்டி வருவதாகவும், இதனால் BSNL நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இப்படி உறுதிப்படுத்தப்படாத தகவலால் BSNL வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி அதன் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு கூறுவது என்ன; நாட்டிலேயே மிக குறைவான கட்டணத்தில் தொலை தொடர்பு மட்டும் இணைதள சேவையை மத்திய அரசின் பொது துறை நிறுவனமான BSNL வழங்கி வருகிறது.

BSNL நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஜாவித் அலிகான், BSNL மட்டும் MTNL சேவையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். இவரது கேள்விக்கு பதில் அளித்த மத்திய தொலை தொடர்பு துறை இணை அமைச்சர், BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூட மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

அதே நேரத்தில் MTNL நிறுவனத்தின் ஊழியர்களை பிற துறைகளில் பணி நியமனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த 2019ஆம் ஆண்டு முதல் BSNL நிறுவனத்துக்கு சொந்தமான நில, சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 25 நில சொத்துக்கள் ரூ.1,341 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், இதில் தமிழகத்தில் மட்டும் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்புள்ள நில, சொத்துக்களை விற்பனை செய்து பணமாக்கி உள்ளதாகவும் கூறினார்.

மேலும் MTNL நிறுவனத்தின் சொத்துக்கள் இதுவரை விற்கப்படவில்லை என்றும், BSNL நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதால் BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டும் அதிகாரிகள் எதிர்காலங்கள் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.