நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமுதாயத்தினருக்கும் நேற்று இரவு திடீரென தகராறு ஏற்பட்டு இருகிறது. இந்த தகராறு காரணமாக அந்த பாப்பாக்குடி பகுதியில் பதட்டமான சூழல் நிலவியுள்ளது தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் அப்பகுதிக்கு சென்று தகராறை தீர்த்துவைப்பதற்காக முயற்சியில் ஈடுபட்டுஉள்ளர்.
அந்த சிறுவன் வந்து தன்னை தற்காத்து கொள்வதற்காக அருகில் உள்ள கழிவறையில் பதுங்கி கொண்டிருந்திருக்கிறார் தொடர்ந்து அந்த கழிவறையில் இருந்த கதவை ஆய்வாளர் முருகன் அவர்கள் திறக்கமுயன்ற போது உள்ளே இருந்த சிறுவன் அரிவாளால் அந்த ஆய்வாளர் கையில் வெட்ட முயன்று இருக்கிறார் ஆய்வாளர் முருகன் தன்னை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கி எடுத்து சிறுவனின் காலில் சுட்டதாக கூறப்படுகிறது .
தொடர்ந்து இருவரும் காயம் அடைந்த சிறுவன் மற்றும் ஆய்வாளர் முருகன் இருவரும் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இது தொடர்பாக நேற்று இரவு மோதலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட தகவலின் அடிப்படையில் 17 வயது சிறுவன் மற்றும் இன்னொரு சிறுவன் அவரோடு சேர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக காவல் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டடிள்ளது.