Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரண்டு நாள் "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" பயிற்சி முகாம்

சென்னை: தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை மற்றும் StratSchool இணைந்து, "செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" எனும் இரண்டு நாள் முழுநேர பயிற்சி முகாமை 05.08.2025 முதல் 06.08.2025 (0 10:00 10 0 5:00 5 ), EDII-TN வளாகத்தில், சென்னை 600 032-இல் நடத்துகிறது.

பயிற்சி முகாம் சுருக்கம்

பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனைகளை செயலில் பயனடையும் Al prototypes (App) ஆக மாற்றக் கற்றுக்கொள்வார்கள்.

முன்னணி ஸ்டார்ட் அப்கள் பயன்படுத்தும் No Code / Low Code Al கருவிகள் பற்றிய பயிற்சி.

கீழ்க்கண்ட பிரபலமான தளங்களை கொண்டு நேரடி பயன்பாட்டு செயலிகள்

உருவாக்கம்:

* ChatGPT/Gemini Pro / NotebookLM

* Firebase/Glide / Zapier / Lovable / Replit / Bolt

* Prompt Engineering முறைகள்

செயல்முறை பயிற்சி

வழிகாட்டியுடன் படிப்படியாக கற்றல்

* AL அடிப்படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம்

* தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள்

* கல்வி, சுகாதாரம், நிதி. சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம்

தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் மனப்பாங்கு உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணும் AI MVP உருவாக்கம்

Problem-Solution Fit, JTBD போன்ற ஸ்டார்ட்அப் கோட்பாடுகள்

உங்கள் App-இன் prototype-ஐ முதன்மை வழிகாட்டிகள், முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன்

தொழில் வளர்ச்சி வழிகள்

மாணவர்கள், நிறுவனர் ஆனவர்கள், content creators, ஆரம்ப நிலை தொழிலாளர்கள் ஆகியோருகேற்ப்ப பொருத்தமானது

* உங்கள் பேராசிரியர் சான்றிதழ் / போட்டிப் பதிவுகளில் காண்பிக்க AI மாதிரிகள்

* Product Managers, Solopreneurs பயன்படுத்தும் கருவிகள் கற்றல்

* வேலை வாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் லிங்க்ட் இன் தளங்களில் செயல்படுத்தும் வாய்ப்புகள்

தொழில் முனைவு பாதைகள்

AI அடிப்படையிலான வணிகம் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்க அடித்தளம் அமைத்தல்

குறைந்த செலவில், விரைவில் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைகளை பரிசோதித்தல்

தகுதியுடையவர்கள்:

மாணவர்கள், பட்டதாரிகள். தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் - 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும்