Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமரன் படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: அமரன் படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி பொறியியல் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜ்கமல் பிலிம் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த அமரன் திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகி சாய்பல்லவி மொபைல் எண் என்று தனது எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை ஆழ்வார்திருநகரை சேர்ந்த வாகீசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருவதால் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

இதனால் தன்னால் படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை என்றும் மொபைலை ஏரோ பிளைன் மோடுக்கு மாற்றுவதுக்குள் நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம் என சொல்ல தேவையில்லை என்று இது குறித்து அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. அரசியல் சாசனம் தனக்கு வழங்கிய வாழ்வுரிமை, அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ரூ.1 கோடியே 10 லட்சம் இழப்பீடாக வழங்க ராஜ்கமல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும். படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தனது எண்ணிற்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இந்த நிலையில் பொறியியல் மாணவர் வாகீசன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.