தென்காசி : தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கீழ அழகுநாச்சியார் கிராமத்தை சேர்ந்தவர் சுகுந்தன் இவர் நெல்லை ஜங்ஷன் பகுதியில செயல்படக்கூடிய பிரபல அல்வா கடையில் 4 கால்கிலோ அளவிற்கான அல்வா பாக்கெட்களை வாங்கியிருக்கிறார். தன்னுடைய வீட்டிருக்கு கொண்டுபோய் தன்னுடைய குடும்பத்துடன் சாப்பிட முயன்று உள்ளார்.
அந்த நேரத்தில் அல்வா பாக்கெட்களை திறந்து பாத்தபோது அதில் சிறிய அளவிலான தேள் குட்டி இருந்து உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் செய்வது அறியாமல் அதை சாப்பிடாமல் அதை அப்படியே வைத்து கொண்டு தன்னுடைய செல்போன் மூலம் அதை விடியோவாக பதிவுசெய்து உள்ளார் தொடர்ந்து இது குறித்து செல்போன் காட்சிகளை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தாமாக முன்வந்து நெல்லை மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் புஷ்பராஜ் இன்று காலை நெல்லை ஜங்ஷன் பகுதியில் செயல்படக்கூடிய அந்த தனியார் ஆல்வா கடை நிறுவனத்தின் குடோரோன் பகுதியில் தன்னுடைய குழுவினரோடு சேர்ந்து ஆய்வு நடத்தினர்.
இது குறித்து விளக்கம் கேட்டு சம்மந்த பட்ட அந்த நிர்வாகத்திற்கு ஷோகாஸ் நோட்டீஸ் வழகியிருக்க நிலை இருகிறது அல்வாவில் தேள் இருந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. சம்பவத்தில் உறுதி செய்யப்பட தன்மை இருந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.