மும்பை: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்தது. கரப்பான் பூச்சி இருப்பதாக கூறிய இரு பயணிகள் வேறு இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
ஏர் இந்தியா விமானம் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் கரப்பான் பூச்சி இருப்பதாக சில பயணிகள் புகார் அளித்ததை அடுத்து, பயணிகளின் இருக்கைகள் மாற்றப்பட்டு, அவர்கள் வேறு இடத்தில் அமர்த்தப்பட்டனர். இதன் பிறகு, எரிபொருள் நிரப்புவதற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது அதன் உட்புறம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு மும்பைக்கு விமானம் மீண்டும் தொடங்கியது
"தூய்மைப் பணி நடந்த போதிலும், தரை நடவடிக்கைகளின் போது பூச்சிகள் எப்போதாவது விமானத்திற்குள் நுழைந்து விடுகின்றன. ஏர் இந்தியா இந்த விஷயத்தை விசாரித்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.