கோலாலம்பூர்: ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்டு நகரத்துக்கு ஏர் ஏசியா விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் சீன பெண்கள் சத்தமாகப் பேசியதற்கு பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சத்தமாக பேசிக் கொண்டிருந்த பெண்களை ஆண் பயணி ஒருவர் முட்டாள் என்று திட்டியதால் மோதல் ஏற்பட்டது.
விமானத்தில் லைட்டை அணைத்த பிறகும் பெண்கள் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததால் தகராறு ஏற்பட்டது. முட்டாள்களே வாயை மூடுங்கள் என பெண்கள் இருக்கைக்கு பின் இருந்த ஆண் பயணி திட்டியுள்ளார். ஆண் பயணி திட்டியதால் ஆத்திரமடைந்த பெண் தன் இருக்கையில் ஏறி நின்று ஆண் பயணியை தாக்கினார். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதை சமாதானப்படுத்தி, விலக்க விமான ஊழியர்கள் முயன்ற நிலையில் மோதல் முடிவுக்கு வந்தது.