பதின்ம வயதினரின் புதிய நண்பனாக மாறிய ஏஐ: தனிமை பெருகி மனநலப் பிரச்சினை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் கவலை
வாஷிங்டன்: பள்ளிக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, மேக்கப் நிறங்களை தேர்ந்தெடுப்பது, பிறந்த நாள் கொண்டாட்ட யோசனைகள் இவற்றுக்கெல்லாம் தற்போது பதின்ம வயதினர் யார் இடம் ஆலோசனை கேட்கிறார்கள் தெரியுமா ஏஐ-யிடம் தான். தற்போது பதின்ம வயதினர் ஏஐ-யை ஜாக்பாட்களை நண்பனை போல பயன்படுத்துகின்றனர். தினசரி வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தேங்களுக்கும் தனிப்பட்ட ஆலோசனைக்கும், உணர்ச்சிப்பூர்வமான சமயங்களில் ஆதரவுக்கும் ஏஐ ஒரு நம்பகமான துணையாக மாறிவிட்டதாக பதின்ம கூறுகிறார்கள்.
அமெரிக்காவை சேர்ந்த காமன் சென்ஸ் மீடியா நடத்திய புதிய ஆய்வின்படி, 70 சதவீதத்துக்கும் அதிகமான பதின்ம வயதினர் ஏஐ-யை துணைகளை பயன்படுகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 31 சதவீதம் பேர் ஏஐ-யை ஜாக்பாட்களுடனான உரையாடல்கள், உண்மையான நண்பர்களுடன் பேசுவதை விட திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் 33 சதவீதம் பேர் முக்கியமான தனிப்பட்ட விசயங்களை ஏஐ-யை யுடன் விதித்துள்ளனர்.
இத்தகைய போக்கால் சமூக உறவுகள் பாதிக்கப்படலாம், தனிமை பெருகி மனநில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் கூடும் கவலைகளும் எழுந்து உள்ளன. ஏஐ-யை அதிகமாக சார்ந்திருப்பதால் இளம் வயதினரின் படைப்பாற்றல் விமர்சன சிந்தனை மற்றும் சமூக திறன்கள் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏஐ ஒரு சக்தி வாய்ந்த கருவி என்றாலும் அது மனித உறவுகளுக்கு மாற்றாகாமல் துணைக்கருவியாக இருக்கவேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.