கூடலூர்: கூடலூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாடந்துரை கணியம்வயல் கிராமத்தில் இன்று காலை நடமாடிய காட்டு யானை விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல் மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலமுலா பகுதியில் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். குடியிருப்புகளை ஒட்டி யானைகள் நடமாடியதால் குடியிருப்பு வாசிகள் அத்ததில் உள்ளனர்.
‘‘விவசாய நிலங்களுக்குள்வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியை ஒட்டியுள்ள தாய்சோலை தனியார் தேயிலை தோட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாமல் வளர்ந்துள்ள தேயிலை செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். வன எல்லையில் உள்ள அகழிகளை சீரமைத்து யானைகள் உள்ளே வருவதை தடுக்க வேண்டும்’’ என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.