Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2025ம் ஆண்டிற்கான அகராதி ஆய்வு மலருக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்பு!!

சென்னை : 2025ம் ஆண்டிற்கான அகராதி ஆய்வு மலருக்கு ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,‘தமிழ் அகராதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பர் 8ம் நாள் ‘தமிழ் அகராதியியல் நாள் விழாவாகக்’ கொண்டாடப்பட்டு, ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ‘அகராதி ஆய்வு மலர்’ வெளியிடப்பட்டுவருகிறது. அவ்வகையில் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான அகராதி ஆய்வு மலருக்குக் கீழ்க்காணும் பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தேர்வுக்குழுவால் தெரிவுசெய்யப்படும் கட்டுரைகள் மட்டுமே ‘தமிழ் அகராதியியல் நாள்’ சிறப்பு ஆய்வு மலரில் இடம் பெறும்.

பொருண்மைகள்:

*கலைச்சொல்லாக்க அகராதி

*துறைதோறும் கலைச்சொல்லாக்க அகராதிகளின் தேவைகள்

*அகராதியலில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தம்

*அச்சு அகராதிகளும் மின் அகராதிகளும்

*காலந்தோறும் அகராதியியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள்

*மின் அகராதி முதல் அகராதி செயலி வரை

*அகராதிகளும் சொற்குவையும்

*பேரகராதிகளும் சொல் அகராதிகளும் (Lexicons and Glossaries)

*தமிழில் அயற்சொல் அகராதிகளின் தேவைகள்

*இணைய அகராதிகளின் நன்மை தீமைகள்

*எந்திர மொழிபெயர்ப்பில் ஏற்படும் பிழைகளும் தீர்வுகளும்

*மொழிபெயர்ப்புப் பணிகளில் அகராதிகளின் பங்களிப்பு

*கலைச்சொல்லாக்கத்தில் அகராதிகளின் பங்கு

*துறை நூல்கள் உருவாக்கத்திற்கு அகராதிகளின் பங்களிப்பு

*பாட நூல் உருவாக்கத்தில் அகராதிகளின் பங்களிப்பு

உள்ளிட்ட தலைப்புகளிலும், இத்தலைப்புகளோடு தொடர்புடைய பிற பொருண்மைகளிலும் கட்டுரைகளை ஏ4 அளவில் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் மருதம் ஒருங்குறி (யுனிகோடு) எழுத்துருவில், எழுத்தளவு 11 புள்ளி, வரி இடைவெளி 1.5-இல், சொற்செயலிக்கோப்பாக (Word Document file) agarathimalar2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், “இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல்தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600 028”என்ற இயக்கக முகவரிக்கும் 01.09.2025-ஆம் நாள் மாலை 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிட வேண்டும். கட்டுரையுடன் முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஒரு பக்க அளவில் தன்விளக்கக் குறிப்பு ஆகியவற்றையும் கட்டாயம் இணைத்து அனுப்பிட வேண்டும். மேலும், அனுப்பப்படும் ஆய்வுக் கட்டுரை இதற்கு முன் வேறு எந்த இதழ்களுக்கும் வழங்கப்பெறவில்லை என்ற உறுதிமொழியையும் தன்னொப்பமிட்டு (self attested) அனுப்பிட வேண்டும். கட்டுரைகள் கட்டாயம் அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற் பட்டியலுடன் அமைதல் வேண்டும்,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.