Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர் ஆமிர் கானின் வீட்டுக்கு வந்த 25 ஐபிஎஸ் அதிகாரிகள்: பகீர் தகவல்

மும்பை: நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோல் போலீஸ் ஜீப் ஒன்றும் அதைத் தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகள் வந்த வேன் ஒன்றும் வெளியே செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான்.

‘லகான்’, ‘தங்கல்’, ‘3 இடியட்ஸ்’, ‘தாரே ஜமீன் பர்’ போன்ற படங்கள் மூலமாக உலக அளவில் அறியப்படும் நடிகராக இருக்கிறார் ஆமீர் கான். சமீபத்தில் இவரின் நடிப்பில் ‘சிதாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) இந்தி படம் வெளியானது. அறிவுசார் சவால் கொண்ட குழந்தைகள் குறித்த கதையான இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெனிலியா நடித்திருந்தார். கூடைப்பந்து கோச்சாக நடித்திருந்த ஆமீர்கானே இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். இந்தப் படம் 180 கோடி அளவில் வசூல் செய்தது.

இதற்கிடையே தான் நடிகர் ஆமிர் கானின் வீட்டிற்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், இன்று காலை போலீஸ் வாகனங்கள் அவரது வீட்டை விட்டு வெளியேறுவதைக் காண முடிகிறது. மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஆமிர் கானின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் இருந்து போலீஸ் ஜீப் ஒன்று முதலில் வெளியேறுகிறது. அதன்பின்னர் பெரிய போலீஸ் வேன் ஒன்றும் வெளியேறுகிறது.

தகவல்களின்படி சுமார் 25 ஐபிஎஸ் அதிகாரிகள் பாந்த்ராவில் உள்ள ஆமிர் கானை அவரது வீட்டில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த சந்திப்பு தொடர்பாக ஆமிர் கான் தரப்பில் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆமிர் கானின் டீமை தொடர்புகொண்டு விசாரித்ததில், ஐபிஎஸ் அதிகாரிகளின் திடீர் வருகைக்கான காரணம் குறித்து தங்களுக்குத் தெரியவில்லை என்றும் ஆமிர்கான் இனிமேல் சொன்னால்தான் தெரியும் என்றும் தெரிவித்தனர்.