திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
காஞ்சிபுரம்: திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. 2018ல் மூன்றாம் கட்டளையில் தனது 2 குழந்தைகள் அஜய் (6), கார்னிகா (4) ஆகியோரை கொன்றார் அபிராமி. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 குழந்தைகளுக்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தந்து கொன்றார். அபிராமிக்கும் அதே பகுதியில் பிரபல பிரியாணி கடையில் பணியாற்றி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டிருந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளை கொன்ற சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியும், காதலன் மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அபிராமி, காதலன் மீனாட்சி சுந்தரம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருவரும் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நீதிபதி செம்மல் தெரிவித்துள்ளார். அபிராமி, மீனாட்சிசுந்தரம் ஆகியோருக்கு சற்றுநேரத்தில் தண்டனை விவரம் வழங்கப்படவுள்ளது