தஞ்சை: தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் அமைந்து உள்ளது கீழணை தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது இதனால் மேட்டூர் ஆணை நிரம்பியது இதனால் தற்போது கீழணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது கீழணையில் இருந்து சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்ற படுகிறது.
இதில் கடலுக்கு மட்டும் 1 லட்சத்து 65ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற படுகிறது தற்போது பவானி ஆற்றில் இருந்து 1 லட்சம் கன அடி வந்துகொண்டு இருப்பதாலும் மேலணையில் இருந்து தண்ணீர் வந்துகொண்டு இருப்பதாலும் அணையின் பாதுகாப்பை கருதி கீழணையில் சுமார் 9 ஆயிரம் மட்டுமே தேக்க முடியும். தற்போது நீர் வரத்து அதிகமாக வந்துகொண்டு இருப்பதால் வரும் நீரை அப்படியே கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் முதலை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என பொதுப்பணி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்பி எடுக்கவோ குளிக்கவோ கால்நடைகளை மேல்சேலாவோ விடகூடாது என பொதுத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.