மும்பை :24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்களைத் திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது மராட்டிய அரசு. இரவில் கடைகளைத் திறந்து வைப்பவர்களுக்கு காவல்துறையினர் தொல்லை தருவதாக கடைக்காரர்கள் புகார் அளித்துள்ளனர். கடைக்காரர்களின் புகாரை அடுத்து 24 மணி நேரமும் கடைகள், ஓட்டல்களை திறந்து வைக்க அனுமதி தந்தது அரசு. மதுபானக் கடைகள், மதுக்குடிப்பகங்கள் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement