சென்னை: தமிழ்நாட்டில் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அனைத்து காவல் நிலையங்களுக்கும் தெரிவிக்க டி.ஜி.பி., மாநகர காவல் ஆணையர்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவில் கடைகளை மூடும்படி போலீசார் நிர்பந்திப்பதாக இந்திய தேசிய உணவக சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது இந்த வழக்கு விசாரணையில், கடைகள் 24 மணி நேரமும் திறக்க அனுமதிக்கும் அரசாணை பற்றி காவல் நிலையங்களுக்கு தெரிவிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
+
Advertisement