வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று கடை, கடையாக ஏறி சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்ற அதிகாரிகள், நீங்கள் காலையில் எத்தனை மணிக்கு கடை திறப்பீர்கள், இரவு எத்தனை மணிக்கு பூட்டுவீர்கள். சம்பவம் நடந்த நாளில் கடை திறந்த நேரம், பூட்டிய நேரம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் கடைகளில் சிசிடிவி கேமரா வைத்துள்ளனரா என்றும் ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா வைத்திருந்த கடையில் வீடியோ பதிவுகளை பயணியர் விடுதிக்கு கொண்டு வந்து நேரில் கொடுக்கும்படி தெரிவித்தனர். இந்த விசாரணையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகள் இந்தியில் கேள்வி கேட்டனர். இதை ஒரு அதிகாரி தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் கடை உரிமையாளர்கள் தெரிவித்த பதிலை அந்த அதிகாரி இந்தியில் மொழிபெயர்த்தார்.
