ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மகளிர் டிராப் பிரிவில் நேற்று, இந்திய வீராங்கனை நீரு தண்டா, அபாரமாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார். கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிருக்கான டிராப் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை நீரு தண்டா கடைசி சுற்றில், சிறப்பாக செயல்பட்டு, 43 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். கத்தார் வீராங்கனை பாஸில் ரே 37 புள்ளிகளுடன் வெள்ளி, மற்றொரு இந்திய வீராங்கனை ஆஷிமா 29 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர். தவிர, 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் 4ம் இடத்தையும், ஈஷா சிங் 6ம் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில், சீன வீராங்கனைகள் யுயு ஜாங் தங்கம், ஜியாருய்ஸுவான் ஸியாவ் வெள்ளி பதக்கம் வென்றனர்.
+
Advertisement