தோஹா: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றுப் போட்டி கத்தாரின் தோஹா நகரில் நடந்தது. மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நடந்த ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர் பிரார், சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில் அய்ஸ்வரி பிரதாப் சிங் தோமர், வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கம் வென்ற சிம்ரன் பிரீத்தின் தந்தை, தான் பார்த்து வந்த அரசு வேலையை விட்டுவிட்டு, தனது மகள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திறனை வளர்க்க உதவி வந்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


