சென்னை: காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ கடந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் கூறியதாவது; காசாவில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் நெஞ்சை உருக்குகின்றன. காசாவில் நடக்கும் நிகழ்வுகளை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது.
காசாவில் நடக்கும் தாக்குதல்கள் வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு அதிர்ச்சியை தருகின்றன. காஸாவில் குழந்தைகளின் அழுகைக் காட்சிகள், பட்டினிக் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன. அப்பாவி உயிர்கள் நசுக்கப்படும்போது அமைதி காக்க முடியாது. காஸாவில் போரை நிறுத்துவது குறித்து இந்தியா உறுதிப்பட பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.