Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி-க்கு இமாலய கல்விக்கட்டணம்: ஒன்றிய அரசின் கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணம் அரசு பள்ளிகளை காட்டிலும் 100 மடங்குவரை அதிகமாக இருப்பது ஒன்றிய அரசின் கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. மழலையர் வகுப்புகளிலேயே இமாலய கட்டணத்தை தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பதால் பெற்றோர்கள் கடும் நிதிச்சுமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கல்வி தொடர்பான விரிவான கணக்கெடுப்பு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.இதன்படி ஊரக பகுதிகளில் மழலையர் பள்ளியில் சராசரியாக ஒரு மாணவருக்கான ஆண்டு கட்டணமானது அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகளில் 22 மடங்கு அதிகமாக உள்ளது.

அதாவது அரசின் மழலையர் பள்ளியில் ஒரு மாணவருக்கான செலவு ரூ.823 ஆக மட்டும் உள்ள நிலையில் இதுதணியர் பள்ளியில் ரூ.17,988 ஆக உயருகிறது. இது தொடக்கக்கல்வியை பொறுத்தவரை அரசு பள்ளிகளில் கட்டணமானது ரூ.1741ஆக உள்ள நிலையில் இது தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 11 மடங்கு அதிகரித்து ரூ.19,794 ஆக உள்ளது. உயர்நிலை கல்வியை பொறுத்தவரையில் அரசு பள்ளியைவிட தனியார் பள்ளியில் 6 மடங்கு அதிக கட்டணமும், மேல்நிலை பள்ளியில் 4.5 மடங்கு கல்வி கட்டணமும் உயருகிறது.

குழந்தைகள் நலனில் அக்கறையின்றி கல்வியை சந்தையாக பார்ப்பதாலேயே இந்த அளவுக்கு தனியார் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நகர்புறத்தை பொறுத்தவரை அரசின் மழலையர் பள்ளிகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1630 ஆக உள்ள செலவு தனியார் பள்ளியில் 16 மடங்கு உயர்ந்து ரூ.26188 ஆக இருப்பதாக ஒன்றிய அரசின் கணக்கெடுப்பு கூறுகிறது. நாட்டிலேயே நகர்புறத்தில் அதிகமான கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் கர்நாடகாவில் இருப்பதும் சர்வேயில் தெரியவந்துள்ளது.

அம்மாநிலத்தின் நகர்ப்புற பகுதியில் உள்ள பள்ளியில் மழலையர் வகுப்பு கல்வி கட்டணம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.49,271 ஆகம் ஆனால் அரசு பள்ளியில் மழலையர் வகுப்பு கட்டணம் வெறும் ரூ.688 மட்டுமே அதாவது தனியார் பள்ளிகள் 72 மடங்கு கூடுதலாக மழலையர் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன. அதே போல் ஊரக பகுதிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளன. அம்மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான கல்விக்கட்டண வித்தியாசம் 107.9 மடங்காக உள்ளது. இந்த பட்டியலில் 49.1 சதவீத வித்தியாசத்துடன் ஆந்திரா 2வது இடத்திலும், 45.3 சதவீத வித்தியாசத்துடன் தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளன.