Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இறந்தவரின் உடலில் இதயத்தை காணோம்: 4 வாரங்களுக்கு பிறகு கண்ட அதிர்ச்சி

கான்பெர்ரா: இறந்த நபரின் உடலில் இதயத்தை காணவில்லை என குடுப்பதினார் அளித்த புகார் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. 23வயதான பைரேல் என்ற நபர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிக்கு சுற்றுலாக்காக சென்றுள்ளார். அப்போது பாலியிலுள்ள தனியார் வில்லாவில் இருக்கும் ஒரு குளத்தில் மயக்கம் அடைந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியா அதிகாரிகள் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக மௌனத்துக்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நான்கு நாட்களுக்கு பிறகு தான் போலீசில் புகார் செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் அங்க சென்றபோது அந்த இடம் ஏற்கனவே மாசுபட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்து நான்கு வாரங்களுக்கு பிறகு பைரலின் உடல் ஆஸ்திரேலியாவில் உள்ள அவர் வீட்டுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. அங்க அவருக்கு இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போது அவரது இதயம் காணாமல்போனதை அவரது பெற்றோர் கண்டறிந்தனர். இதனையடுத்து குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்து புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதயம் பாலியில் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அதே நேரத்தில் எங்களது ஒப்புதல் இல்லாமல் எப்படி இந்த செயல் நடந்தது, யார் இதை செய்தது என குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். இந்தோனேசியா அதிகாரிகள் பைரலின் மரணத்தை நீரில் மூழ்கி இறந்ததாக அறிவித்தாலும் அவரது குடும்பத்தினர் அதை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். அவரது தாயார் பைரலின் உடலில் வெட்டுக்காயம் இருந்ததாகவும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இறந்தவரின் உடலில் இதயம் காணாமல் போன சம்பவம் குறித்தன செய்தி அதிரிச்சி ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அதிகாரிகள் இந்தோனேசியா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.