சேத்துப்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள கோவிலூர் பகுதியில் மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் சிவன் கோயில் உள்ளது.. இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோயில் புனரமைப்பு பணிநடக்கிறது. கோயிலின் கருவறை பகுதியில் நேற்று பள்ளம் தோண்டியபோது பானை ஒன்று தென்பட்டது. அதில் 103 தங்க நாணயங்கள் இருந்தன. அவை எந்த காலத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
+
Advertisement 
 
 
 
   