ஹாங்காங்: உலக கப்பல் கட்டும் துறையில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு வர்த்தக போரை தாண்டி, கப்பல் கட்டும் துறையில் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், சீன கப்பல் கட்டும் நிறுவனங்கள் மீதான விசாரணையில் அங்கம் வகிப்பதாக தென் கொரியாவை சேர்ந்த பிரபல கப்பல் கட்டும் நிறுவனமான ஹன்வா ஓசனின் 5 அமெரிக்க துணை நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. இந்த 5 அமெரிக்க துணை நிறுவனங்களுடன் எந்த சீன நிறுவனமும் ஒப்பந்தம் செய்யாது என சீன வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
+
Advertisement