துபாய்: சோமாலியா கடற்கரையில் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். சோமாலியா கடற்பகுதியில் மால்டா கொடியுடன் கூடிய டேங்கர் கப்பல் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலமாக இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் கப்பலிலும் ஏறியதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கப்பல்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தனியார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரேயும் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
+
Advertisement
