Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்

போடி : தேனி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பல இடங்களில் பல ஊர் களில் சற்று கனமழையாகவும் பெய்து வருவதால் ஆங்காங்கே சாலைகளில் தேங்குவதும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் ஆறாக கடப்பதுமாக இருக்கிறது.கோடைகாலத்தில் பகலில் கொளுத்துவதும் இரவில் வெப்பக் காற்று வீசியதால் உறங்குவதற்கும் பொது மக்கள் பெரும்பாடுபட்டு தாங்க முடி யாமல் சிரமம் அடைந்து வந்தனர்.

இதற்கிடையில் போடி வடக்கு மலை மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள போடி மெட்டு, குரங்கணி, உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் ஒன்று சேர்ந்து குரங்கணி கொட்டகுடி சாம்பலாற்று தடுப்பணையில் சற்று நிரப்பியுள்ளது.சிறு ஆறு போல் தடுப்பனையில் மறுகால் பாய்வதால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வரத்துவங்கி கடந்து வருகிறது.

இதில் போடி அருகே உள்ள முந்தல் சாலையில் இருக்கும் கொட்டகுடி ஆற்றுக்குள் அணை பிள்ளையார் மெகா தடுப்பணையிலும் தற்போது ஓரமாக ஒருபுறம் தண்ணீர் தேங்கி பாதியளவு மறுகால் பாய்ந்து கொட்டி வருகிறது.இதனை கண்ட சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பலரும் வறண்டு கிட ந்த அணைப்பிள்ளையார் தடுப்பு அணையில் இறங்கி அதில் அமர்ந்து பகல் நேரங்களில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் மழை தொடர்வதால் மலை களில் இருந்து உருண்டு வரும் சிறு காட்டாறு வெள்ளம் பெரும் வெள்ளமாக மாறி விரைவில் எதிர்பாராத விதமாக திடீரென கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தற்போது நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் எனவும் மலைப்பகுதிகளில் கடக்கும் போது கவனமாக கடக்க வேண்டும், தடுப்ப ணை பகுதிகளில் உள்ளே இறங்கி செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.