தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புஞ்சை நிலங்களுக்கு பயன்படும் வகையில் வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் 29.10.2025 முதல் சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 62.68 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள 1640 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.
+
Advertisement
