கரூர் துயர சம்பவத்தை கூட்டணி ஆதாயத்துக்காக பாஜ பயன்படுத்துவது வெட்கக்கேடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கண்டனம்
சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்மண்டல இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு தலைவர் அப்துல் கரீம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முஜிபுர் ரஹ்மான், பொருளாளர் இப்ராஹிம், தணிக்கைக் குழுத் தலைவர் சுலைமான், மாநில மேலாண்மை குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூரில் நடந்த மரணங் கள் மிகப்பெரும் மனத்துயரை ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் கொண்டு வந்து சேர்த்துள்ளது, இந்த நேரத்தில் கூட்டணி கணக்குகளுக்காக விஜய்யை வளைப்பதற்கு பாஜ உள்ளிட்ட கட்சிகள் முயல்வது வெட்கக்கேடானது என்பது உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.