லண்டன்: அமெரிக்க கோடீஸ்வரரும், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன், இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இருந்த நட்பால் வர்ஜீனியா கியூப்ரே என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. சிறுமியாக இருந்தபோது இளவரசர் ஆண்ட்ரூ தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2021ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.
வர்ஜீனியா கியூப்ரேயின் சுயசரிதை விரைவில் வெளியாக உள்ளது. அதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்பதால், தனது சகோதரரான மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் குடும்பத்தினருடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, தனது பட்டங்களைத் துறப்பதாக ஆண்ட்ரூ நேற்று அறிவித்தார்.