சென்னை: பாலியல் வன்கொடுமை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் , பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா,தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் குற்றவாளிகள் மீது சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
+
Advertisement 
 
 
 
   